/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி உயர்வு பேச்சுவார்த்தை ஒரு ஆண்டாக இழுத்தடிப்பு; நாளை கூடும் விசைத்தறி சங்க பொதுக்குழுவில் முக்கிய முடிவு

ADDED : ஜன 24, 2025 11:00 PM
சோமனூர்; ஒரு ஆண்டாக கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி பிரதான தொழிலாக உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கூலியின் அடிப்படையில், 95 சதவீத விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 2022ம் ஆண்டு கூலியில் இருந்து, புதிய கூலி உயர்வு வேண்டும். ஒப்பந்த கூலி உயர்வை குறைக்காமல் இருக்க, சட்டபாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு,ஆறு சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விசைத்தறி சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக, ஏழு முறை கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால், முடிவு எட்டப்படவில்லை. அதேபோல், ஆண்டுக்கு ஆறு சதவீத மின் கட்டண உயர்வும் ரத்து செய்யப்படவில்லை.
இதனால், விசைத்தறியாளர்கள் விரக்தியடைந்தனர். கூட்டு கமிட்டி நிர்வாகிகள் கூடி, பொதுக்குழு கூட்டம் நடத்துவது, அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தீர்மானித்தனர்.
இதையொட்டி, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம், நாளை காலை, கோம்பக்காடு புதூரில் உள்ள சிவசக்தி மகாலில், காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில், சங்க வளர்ச்சி, ஆர்ப்பாட்ட தேதி முடிவு செய்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.