தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்


UPDATED : அக் 14, 2026 06:21 PM

ADDED : அக் 14, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:21 PM ADDED : அக் 14, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: ஊதிய உரிமைகளை வழங்காத, வட்ட நிர்வாகத்தை கண்டித்து, சூலுார் தாலுகா அலுவலக வளாகத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூலுார் தாலுகாவில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய தேர்வு நிலை ஊதியம் மற்றும் வருடாந்திர ஊதிய உயர்வு ஆகியவை உரிய காலத்தில் வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது. ஊதிய உயர்வை வழங்காத, சூலுார் வட்ட நிர்வாகத்தை கண்டித்து, தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குமார், துணை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

ஊதிய உரிமைகளை தொடர்ந்து தாமதப்படுத்துவதற்கு உரிய விளக்கத்தை நிர்வாகம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஊதிய உரிமைகள் தாமதமில்லாமல் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us