/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநடப்பு, ஆல் பாஸ்... கூட்டம் முடிந்தது 'ஓவர்!' வேடிக்கை கூட்டமானது நகர்மன்ற கூட்டம்
/
வெளிநடப்பு, ஆல் பாஸ்... கூட்டம் முடிந்தது 'ஓவர்!' வேடிக்கை கூட்டமானது நகர்மன்ற கூட்டம்
வெளிநடப்பு, ஆல் பாஸ்... கூட்டம் முடிந்தது 'ஓவர்!' வேடிக்கை கூட்டமானது நகர்மன்ற கூட்டம்
வெளிநடப்பு, ஆல் பாஸ்... கூட்டம் முடிந்தது 'ஓவர்!' வேடிக்கை கூட்டமானது நகர்மன்ற கூட்டம்
ADDED : ஜன 31, 2024 11:19 PM

பொள்ளாச்சி- 'வெளிநடப்பு, ஆல் பாஸ், என்ற கோஷங்களுடன் நேற்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் நடந்தது. யாரும் இல்லாத அரங்கில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேச வேண்டியதை பேசி சென்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க தலைவர் சியாமளா முற்பட்டார்.
அப்போது, சில தி.மு.க., கவுன்சிலர்கள், 'ஜாதி பெயரை கூறி பேசிய கவுன்சிலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க வேண்டாம்,' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கமிஷனர் சுப்பையா, 'உறுதிமொழி வாசிப்பது மரபாகும். நீங்கள் கூறும் பிரச்னையில், கோர்ட்டில் வழக்கு உள்ளது; இது பற்றி பேச வேண்டாம்,' என்றார்.
அதற்கு கவுன்சிலர்கள், 'மரபு மீறல் தான் நடந்துள்ளது; எனவே, வாசிக்க வேண்டாம்,' என்றனர்.
அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் தேவகி (சுயே.,), 'கோர்ட்டில் வழக்கு உள்ளது. அங்கு பேச வேண்டியதை இங்கு பேசக்கூடாது. பேசினதையே பேசுறீங்க,' என்றார். இதையடுத்து, தீண்டாமை ஒழிப்பு தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதில், இரு தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கவில்லை.
ஆட்சேபனை
கூட்டத்தில் தீர்மான நேரம் துவங்கியதும், துணை தலைவர் கவுதமன் பேசியதாவது:
நகராட்சி கமிஷனராக ஸ்ரீதேவி இருந்தபோது, ஜோதிநகரில் கட்டப்பட்ட நுாலக கட்டடம், நுாலகத்துறைக்கு ஒப்படைத்து கடிதம் வழங்கப்பட்டது. தற்போது மாவட்ட கலெக்டரிடம் பேசிவிட்டோம் எனக்கூறி தனியார் அமைப்பிடம் ஒப்படைப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன்.
அதே போன்று, திட்ட சாலையை நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன். இந்த தீர்மானங்களை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறேன்.
இவ்வாறு, பேசினார்.
தன்னந்தனியே!
அதன்பின், அ.தி.மு.க., கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா பேச எழுந்த போது, தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி தலைவர், கோரஸ் ஆக தீர்மானங்கள் ஆல் பாஸ் எனக் கூறி அரங்கில் இருந்து கலைந்து சென்றனர். கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளும் வெளியேறினர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, சாந்தி, வசந்த் ஆகியோர் மட்டும் அரங்கில் இருந்தனர். அப்போது, கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, 'தனியாருக்காக, 50 அடி திட்ட சாலையை நீக்கம் செய்து, திறந்த வழி மற்றும் பொது உபயோக பகுதி நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
அதே போன்று, தொழில் உரிமம் கட்டணம் உயர்வு செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இதை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு செய்யப்போவதை அறிந்து, 'தீர்மானங்கள் ஆல் பாஸ்' எனக்கூறி தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்து விட்டனர். இதற்கு எதிராக அ.தி.மு.க., போராட்டம் தொடரும். நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம்,' என்றார்.