/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பசுமையான உலகம் வேண்டும்': விழிப்புணர்வு மராத்தான்
/
'பசுமையான உலகம் வேண்டும்': விழிப்புணர்வு மராத்தான்
'பசுமையான உலகம் வேண்டும்': விழிப்புணர்வு மராத்தான்
'பசுமையான உலகம் வேண்டும்': விழிப்புணர்வு மராத்தான்
ADDED : செப் 07, 2025 09:22 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பில் 'பசுமையான மற்றும் தூய்மையான உலகம் வேண்டும்' என, விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
இந்த மராத்தான் போட்டியை பள்ளி செயலாளர் கவிதாசன், மேட்டுப்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., ஆனந்த் கொடி அசைத்து துவங்கி வைத்தனர். மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க்கில் துவங்கி, பள்ளியின் விளையாட்டு மைதானம் வரை, 4 கி.மீ வரை மராத்தான் நடந்தது.
நீலகிரி மாவட்டம் செல்லும் சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் கழிவுகளை ஊட்டி சாலையில் வீசி செல்வதால், வன விலங்குகள் உண்டு நோய் வாய்பட்டு இறந்து விட வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வாயிலாக மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். இப்போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.----