/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்ப் வாரிய சட்டம்; கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
வக்ப் வாரிய சட்டம்; கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 09, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கம்யூ., கட்சியினர் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, கம்யூ., கட்சியினர் சார்பில், நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் உக்கடம், வள்ளியம்மை பேக்கரி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட கம்யூ., கட்சியினர் பங்கேற்று முழக்கம் எழுப்பி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

