ADDED : அக் 07, 2024 12:49 AM

அ நிறம் | அளவு
கோவை : இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும் என, குழந்தைகள் நல மருத்துவர் தினேஷ் பெரியசாமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ப்ளு, இருமல், சளி, காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. பள்ளியில் குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். குறிப்பாக, உணவருந்தும் முன் கழுவ, அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
இது மற்ற குழந்தைகளுக்கும் நல்லது. பள்ளி நிர்வாகமும் குழந்தைகளுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், டாக்டர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சோர்வாக இருந்தால் உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
