ADDED : செப் 23, 2026 07:32 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் திறந்தவெளியில் கொட்டிய கழிவால் துர்நாற்றம் வீசுகிறது.
கிணத்துக்கடவு அருகே, சென்றாம்பாளையத்தில் உள்ள கால்வாய்களில் அதிக அளவில் கழிவுகள் தேங்கி, கழிவுநீர் ரோட்டில் வெளியேறும் நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து, அப்குதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு அகற்றும் பணி நேற்று நடந்தது.
இதில், கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவை, துர்நாற்றம் வீசும் வகையில் ரோட்டோரத்தில் உள்ள பள்ளத்தில் கொட்டியுள்ளனர். ரோட்டில் ஆங்காங்கே கழிவுகள் கொட்டியிருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனம் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. துர்நாற்றம் வீசும் வகையில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவு மீது, மண் கொட்டி மூடப்படும்,’ என்றனர்.
