பணி நிரந்தரம் செய்யக்கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2026 07:24 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்யக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், ஒப்பந்த பணியாளர்களாக, துாய்மை பணியாளர்கள், குடிநீர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழியர் சங்க தலைவர் குருபானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.ஐ.டி.யு., மாநில நிர்வாக குழு உறுப்பினர் வேலுசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரத்தினகுமார், மேட்டுப்பாளையம் தாலுகா ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், மா.கம்யூ., செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
‘பிடித்தம் செய்யும் இ.பி.எப்., தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5ம் தேதி முறையாக சம்பளம் வழங்க வேண்டும்’ என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
