ADDED : செப் 23, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கடையில் அலுமினியம் பைப் திருடிய நபரை மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஆதம்பா, 25. இவர், ஆறு மாதங்களுக்கு முன், உடுமலை ரோட்டில் உள்ள தனியார் அலுமினியம் கடையில் பணியாற்றி வந்தார்.
அடிக்கடி விடுப்பு எடுத்ததால், வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். வேலையில்லாமல் இருந்தவர், பணி செய்த கடையில், கடந்த, 12ம் தேதி 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அலுமினியம் பைப்களை திருடினார்.
புகாரின் அடிப்படையில் விசாரித்த மகாலிங்கபுரம் போலீசார், கடையில் இருந்த சி.சி.டி.வி., பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, ஆதம்பாவை கைது செய்தனர்.
