தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விடுதி உணவில் புழு, பூச்சி

விடுதி உணவில் புழு, பூச்சி

விடுதி உணவில் புழு, பூச்சி


ADDED : செப் 23, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக 27 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பாலசுந்தரம் ரோட்டில் உள்ள விடுதியில் 463க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.

சில நாட்களாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சுங்கத்தில் உள்ள விடுதிக்கும் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலசுந்தரம் ரோடு, ஒண்டிப்புதுார், சுங்கத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் வெள்ளலுாரில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் கூறுகையில்,‘‘ கடந்த 20ம் தேதி இரவு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் புழு இருந்தது. இதுகுறித்து கூறிய போது, சரிசெய்வதாக கூறினர். இதுவரை நடவடிக்கை இல்லை. நேற்று வழங்கப்பட்ட வெண் பொங்கல், சாம்பாரிலும் பூச்சி இருந்தது. உணவு கொண்டு வரும் வாகனத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு கையாளப்படுகிறது. அந்த வாகனத்தைப் பார்க்கும் போதே சாப்பிடும் ஆசை போய்விடுகிறது. சுங்கம் விடுதியிலும் இதே நிலை தான்,’’ என்றனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us