/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகள்
/
குறிச்சி குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகள்
ADDED : ஜூலை 30, 2025 09:18 PM
கோவை; குறிச்சி குளக்கரை சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள், குப்பையை குளத்தில் கொட்டுவதால், தேங்கியுள்ள தண்ணீர் மாசுபடுகிறது.
சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் குப்பையை துாய்மை தொழிலாளர்களிடம் கொடுப்பதில்லை; தொட்டியிலும் கொட்டுவதில்லை. மாறாக, அருகாமையில் உள்ள குளக்கரையில் வீசிச் செல்கின்றனர். ஆங்காங்கே குப்பை குவியலாக காணப்படுகிறது. நீர் நிலை மாசுபட்டு வருகிறது. நாளடைவில் குப்பை கொட்டுமிடமாக குறிச்சி குளக்கரை மாறி விடுகிறது.
குளங்களை பராமரிப்பதற்கென மாநகராட்சி பிரத்யேகமாக தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளது. அந்நிறுவனத்தினர் குறிச்சி குளத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதில்லை என்பதால், குப்பை கொட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கண்காணிப்பை பலப்படுத்துவதோடு, குப்பை கொட்டும் செயலை தடுக்க வேண்டும்; மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.