/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்நிலைகளில் கழிவு: அப்புறப்படுத்த கோரிக்கை
/
நீர்நிலைகளில் கழிவு: அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : மார் 18, 2025 10:01 PM

பொள்ளாச்சி, ;கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகள், குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் ஆகியவை காரணமாக, நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், துார்வாரப்படாமல், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது.
நீர்நிலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வழிப்பாதைகள், குளக்கரைகள் ஆகியவற்றை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற வழிமுறைகள் மீறப்படுகின்றன. கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நீர்நிலைகளில், மழைநீர் தேங்காமல் வழிந்தோடுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது, பல இடங்களில், நீர்நிலைகளை கற்களால் மூடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல, நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். கிராமங்களில், நீர்நிலைகளை மூடும் முயற்சியில் எவரேனும் ஈடுபட்டால், கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.