sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கழிவு நீரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம்; மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டம்

/

கழிவு நீரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம்; மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டம்

கழிவு நீரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம்; மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டம்

கழிவு நீரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பம்; மாநகராட்சி பகுதியில் செயல்படுத்த திட்டம்


ADDED : செப் 10, 2025 10:36 PM

Google News

ADDED : செப் 10, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை குளங்களுக்கு வரும் கழிவு நீரில் உள்ள துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, 'பேசில்லஸ் பாக்டீரியா' வாயிலாக, 'நீரினில் நிகழும் அற்புதம்' எனும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் சிங்காநல்லுார், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் உட்பட ஒன்பது குளங்கள் உள்ளன. இவற்றில் கழிவு நீர் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், கழிவு நீரை சுத்திகரித்து சேகரிக்க, குளக்கரைகளில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், 100 சதவீதம் சுத்திகரிப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில், சங்கனுார் கிளை வாய்க்கால், நொய்யல், ராஜவாய்க்கால் வாயிலாக குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

வீடுகள், தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் கலந்து துர்நாற்றம், சுவாச கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

'பேசில்லஸ் பாக்டீரியா' வாயிலாக, கழிவுநீரில் உள்ள துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் 'நீரினில் நிகழும் அற்புதம்' என்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிங்காநல்லுார், வாலாங்குளங்களில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அடிப்படையில், திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிட்ரா கால்வாயில்

சோதனை முயற்சி

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 'பேசில்லஸ் பாக்டீரியா' என்கிற நுண்ணுயிர் குழுமமானது, கழிவுநீரில் இருக்கும் நோய் கிருமிகளை சிதைக்கும் திறன் கொண்டது. இயற்கை சுத்திகரிப்பான் மற்றும் நச்சு நீக்கியாக செயல்பட்டு, கழிவுநீரை குறுகிய காலத்திலேயே சுத்தப்படுத்தும். இத்தொழில்நுட்பத்தால், கால்வாய் கழிவுநீரை சுத்தப்படுத்தும்போது மனிதர்கள், விலங்குகள், தாவரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவிநாசி ரோட்டில் சிட்ரா பஸ் ஸ்டாப் அருகே செல்லும் கால்வாயில், இத்தொழில்நுட்பம் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us