/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்; ரோட்டில் வழிந்தோடும் வெள்ளம்
/
கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்; ரோட்டில் வழிந்தோடும் வெள்ளம்
கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்; ரோட்டில் வழிந்தோடும் வெள்ளம்
கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்; ரோட்டில் வழிந்தோடும் வெள்ளம்
ADDED : நவ 03, 2024 10:43 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால், குள்ளக்காபாளையம் - குரும்பபாளையம் ரோட்டை ஒட்டிய தடுப்பணை நிரம்பி, வெள்ளம் வழிந்தோடியது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நேற்று மாலை கனமழை பெய்தது. மின்னல், இடியுடன் கூடிய மழையால், முன்னெச்சரிக்கையாக, துணை மின்நிலையங்கள் வாயிலாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டுநர்கள், வேகத்தை குறைந்து, பாதுகாப்பாக சென்றனர்.
சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், சிரமம் ஏற்பட்டது. அதேநேரம், சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு, தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேவம்பாடிவலசு குளம், ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது. இதேபோல, கிராமப்புறங்களில் ஆங்காங்கே உள்ள குட்டைகளும் நிரம்பி வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தென்னை சாகுபடிக்கு, தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், குள்ளக்காபாளையம் - குரும்பபாளையம் ரோட்டை ஒட்டிய தடுப்பணை நிரம்பியது. சாலையைக்கடந்து, வெள்ளம் வழிந்தோடியதால், வாகன ஓட்டுநர்கள் சாகச பயணம் மேற்கொண்டனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
கிராமப்புறங்களில், நீர்நிலைக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பல கிராமங்களில் அதிகப்படியான குளம், குட்டைகள் உள்ள நிலையில், அதற்கான கால்வாய்கள், ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி வருகின்றன.
முட்புதர்கள் நிறைந்து, காடு போல் காட்சி அளிக்கிறது. அதனை முழுவதுமாக அகற்றி, நீர்வழித்தடத்தை பாதுகாக்க வேண்டும். இதேபோல, பருவமழை பாதிப்புகளை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.