/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழத்தோட்டம் விநாயகர் கோவிலை நீர் சூழ்ந்தது
/
பழத்தோட்டம் விநாயகர் கோவிலை நீர் சூழ்ந்தது
ADDED : ஆக 20, 2025 09:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பழத்தோட்டம் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான விநாயகர் கோவில் பவானி ஆற்றில் கரையோரம் அமைந்துள்ளது.
கேரள மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்யும் மழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக அணைப்பகுதியின் நீர்த்தேக்க பகுதிகள், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பழத்தோட்டம் விநாயகர் கோவிலையும் நீர் சூழ்ந்தது.