/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டம்பட்டி குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பு
/
காட்டம்பட்டி குளத்திற்கு நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 26, 2025 08:39 PM
அன்னுார்: அன்னுார் வட்டாரத்திலேயே பெரிய காட்டம்பட்டி குளத்திற்கு வரும் அத்திக்கடவு நீரின் அளவு மிக குறைவாக இருந்தது.இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அத்திக்கடவு திட்ட பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொறியாளர்கள் காட்டம்பட்டி குளத்தில் உள்ள ஓ.எம்.எஸ். கருவி, பிரதான குழாய், வால்வு ஆகியவற்றை பரிசோதித்தனர். அதிலிருந்து அடைப்புகளை நீக்கி பழுது பார்த்தனர். இதைத்தொடர்ந்து காட்டம்பட்டி குளத்திற்கு வரும் அத்திக்கடவு நீரின் அளவு அதிகரித்துள்ளது.கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் அத்திக்கடவு திட்ட பொறியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

