/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
/
சோலையாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சோலையாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சோலையாறுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 11:30 PM

வால்பாறை; சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தொடர் மழையால் பி.ஏ.பி., பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான, சோலையாறு அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதனிடையே, சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 162.97 அடியாக உயர்ந்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, மதகுகள் வழியாக கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பெய்யும் கனமழையால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வால்பாறை வாழைத்தோட்டம், ஸ்டேன்மோர் ஆற்றுப்பாலம், குரங்குமுடி பாரதிதாசன்நகர், சேடல்டேம் உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வீடுகளை சூழ்ந்து கொள்ளலாம் என்பதால், கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும்.
இவ்வாறு, கூறினர்.