/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெள்ளாதி தடுப்பணையில் வழிந்தோடுகிறது தண்ணீர்
/
பெள்ளாதி தடுப்பணையில் வழிந்தோடுகிறது தண்ணீர்
ADDED : நவ 11, 2025 10:47 PM

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே பெள்ளாதி தடுப்பணையில் மழையினால் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளை யத்தில் இருந்து ஏழு எருமை பள்ளம் துவங்குகிறது. இப்பள்ளம் வீரபாண்டி பேரூராட்சி, பிளிச்சி ஊராட்சி வழியாக காரமடை ஒன்றிய ஊராட்சிகளான சிக்காரம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை கடந்து சிறுமுகை அருகே பவானி ஆற்றுக்கு செல்கிறது. இந்த பள்ளத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் 10 அடி உயரமுள்ள தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் அப்பகுதி கிணறுகளுக்கு நீரோட்டம் கிடைத்தது.
கடந்த சில நாட்களாக காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏழு எருமை பள்ளத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பெள்ளாதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.------

