/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருதய மூச்சு மீள் உயிர்விப்பு செயல்முறை விளக்கம்
/
இருதய மூச்சு மீள் உயிர்விப்பு செயல்முறை விளக்கம்
ADDED : நவ 11, 2025 10:47 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளை யம் அரசு மருத்துவமனை யில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்களும், சி.பி.ஆர்., எனப்படும் இருதய மூச்சு மீள் உயிர்விப்பு செயல்முறை விளக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், இம்மருத்துவமனையில் அனைத்து பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்பட்டது.
இது குறித்து, முன்னாள் அரசு முதன்மை மருத்துவர் டாக்டர் சேரலாதன் கூறுகையில், ''கூட்ட நெருக்கடியின் போது ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், அசாதாரண சூழ்நிலையில் மார்பு வலி, மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு நின்ற நபர்களுக்கு உதவும் வகையில், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், இதயத்துடிப்பு நின்றவர்களுக்கு மீண்டும் இதயத்துடிப்பை வரவழைக்க எவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது,'' என்றார் .
செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் டாக்டர்கள் சவுமியாவதனா, லேகா, பார்கவி, ராஜேஷ், விஜயபிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா செய்து இருந்தார்.

