/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாரல் மழையால் அணைகளில் நீர்மட்டம் சரிவு
/
சாரல் மழையால் அணைகளில் நீர்மட்டம் சரிவு
ADDED : செப் 10, 2025 09:52 PM

வால்பாறை; வால்பாறையில், சாரல் மழையால் பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
வால்பாறையில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இந்த ஆண்டில் மட்டும் ஏழு முறை நிரம்பியது.
இதே போல் ஆழியாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, மேல்ஆழியாறு உள்ளிட்ட அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து, சாரல்மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.19 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு, 802 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 452 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
சோலையாறு - 7, ஆழியாறு - 31, வால்பாறை - 17, மேல்நீராறு - 52, கீழ்நீராறு - 25 என்ற அளவில் மழை பெய்தது.