/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
/
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : மே 29, 2025 12:35 AM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதையடுத்து, சீரமைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி, பல்லடம் ரோடு தனியார் பள்ளி அருகே, தனியார் கேபிள் பதிக்கும் பணியின் போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள், கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கே.ஆர்.ஜி.பி., நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து வரும் குடிநீர் பகிர்மான குழாய் (ஐந்து இன்ச் பி.வி.சி., பைப்) உடைந்தது.
இதனால், டி.கோட்டாம்பட்டி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதையடுத்து, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது,' என்றனர்.