/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலை பகுதியில் குறைந்தது இளநீர் விலை
/
ஆனைமலை பகுதியில் குறைந்தது இளநீர் விலை
ADDED : அக் 19, 2025 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 32 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 14,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை, இளநீர் வரத்தில் கணிசமான உயர்வு போன்ற காரணங்களால் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் தீபாவளி காரணமாக, லாரிகள் கிடைக்காது என்பதால் வடமாநிலங்களுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.