/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்ட பணி: 8 மாதங்களில் முடிக்க திட்டம்
/
குடிநீர் திட்ட பணி: 8 மாதங்களில் முடிக்க திட்டம்
ADDED : பிப் 22, 2024 11:31 PM
மேட்டுப்பாளையம்;விளாமரத்துார் குடிநீர் திட்டப் பணிகளை, 8 மாதங்களில் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. மேட்டுப்பாளையம் நகரத்துக்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, சாமன்னா நீரேற்று நிலையத்தில் சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைக்கும் வகையில், நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்துாரில் பவானி ஆற்றிலிருந்து நீர் எடுத்து சுத்திகரித்து குடிநீராக விநியோகம் செய்ய விளாமரத்துார் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, ரூ.22.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் கூறுகையில், ''விளாமரத்துார் குடிநீர் திட்டப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது; பணிகளை, 8 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.---