/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி: படிப்படியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை
/
அங்கன்வாடிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி: படிப்படியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை
அங்கன்வாடிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி: படிப்படியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை
அங்கன்வாடிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி: படிப்படியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை
ADDED : அக் 24, 2025 11:49 PM
பொள்ளாச்சி: அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில், படிப்படியாக சுத்திகரிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.
தற்போது, நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி வழங்க வேண்டும். மைய வளாகத்திற்குள் மழைநீர் தேக்கமடைவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும், என, பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த மையங்கள் செயல்படும் கட்டடத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டடத்தின் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஏதேனும் ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் இருந்தால், அதனை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
தொடர்மழை காரணமாக, குழந்தைகளுக்கு காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை வழங்க பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒவ்வொரு ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடிகளில், 50 சதவீத அளவில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து அங்கன்வாடிகளிலும், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து, டாக்டரிடம் சிகிச்சை பெற பணியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர்.

