/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்ரஹார சாமகுளத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
/
அக்ரஹார சாமகுளத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
அக்ரஹார சாமகுளத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
அக்ரஹார சாமகுளத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 06, 2025 05:48 AM
கோவில்பாளையம்; அக்ரஹார சாமக்குளத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு உள்ள அக்ரஹார சாமக்குளம் உள்ளது. இந்தக் குளம் பராமரிப்பின்றி இருந்தது.
இதையடுத்து கவுசிகா நீர்க்கரங்கள் மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து நான்கு ஆண்டுகளாக கரைகளை சீரமைத்தல், குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை ஒழுங்குபடுத்துதல். புதர்களை அகற்றுதல். மதகுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீர்வளத்துறையின் கோவை உதவி கோட்ட பொறியாளர் அம்சராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று குளத்தில் ஆய்வு செய்தனர். குளத்தில் செய்து வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 'குளத்தில் 30 சதவீதம் அளவுக்கு பாதை இல்லாமல் இருக்கிறது. இந்த பாதையை அமைக்க வேண்டும். ஆழப்படுத்த வேண்டும். கரையை அகலப்படுத்த வேண்டும். இதற்கு உதவ வேண்டும்,' என தன்னார்வலர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கையில், 'மூன்று கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் குளத்தில் முழுமையாக அனைத்து பணிகளும் செய்யப்படும்,' என தெரிவித்தனர்.
ஆய்வில் கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பின் விஜய் பாபு, துரைசாமி, 92 வயது விவசாயி ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.