/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதந்தோறும் 100 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிப்பு
/
மாதந்தோறும் 100 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிப்பு
மாதந்தோறும் 100 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிப்பு
மாதந்தோறும் 100 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிப்பு
ADDED : ஆக 14, 2025 08:46 PM
கோவை; கோவை மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ், 1200 கிராமங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி தெரிவித்தார்.
நீரினால் ஏற்படும் மாசு காரணமாக பல்வேறு தொற்று பாதிப்புகள் ஏற்படுகின்றது. மேலும், நீரின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து நீரின் தரம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
குடிநீரில் உள்ள சத்துக்கள், தரம், குறைபாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து முடிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பகுதிகளிலும், நீர் ஆதாரம் துவங்கும் இடத்திலும், இறுதியாக வினியோகிக்கப்படும் இடத்திலும் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. இதில், குறைபாடுகள் இருப்பின், இடைப்பட்ட பகுதிகளிலும் மீண்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, ''கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும், 1200 கிராமங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. மாதந்தோறும், 100 இடங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. குறைபாடுகள் இருப்பின் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், நீரினால் ஏற்படும் நோய் தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது,'' என்றார்.