தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்திபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

 அத்திபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

 அத்திபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : பிப் 12, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சியில் 4,000 குடும்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோவை மாநகராட்சி எல்லையை ஒட்டிய ஊராட்சி என்பதால் புதிய வீடுகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன.

'இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நீண்ட தொலைவுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. முதியோர் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்,' என அத்திப்பாளையம் மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி முன்னாள் தலைவர் சுபத்ரா புருஷோத்தமன் கூறுகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தினமும் 4 லட்சம் லிட்டர் நீர் மட்டுமே தருகிறது.

எம்.ஜி.ஆர்., நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பிரதான குழாயிலிருந்து அதற்கு இணைப்பு தரவில்லை. குடிநீர் நிரப்பவில்லை. நிலா ரெசிடென்சி, விருட்சம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு உடனடியாக எம்.ஜி.ஆர்., நகரில் கட்டப்பட்ட நில மட்ட தொட்டிக்கு பில்லூர் திட்ட பிரதான குழாயில் இருந்து இணைப்பு தந்து குடிநீர் நிரப்ப வேண்டும். ஊராட்சிக்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், என்றார்.

ஊராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'குழாய் உடைப்பு, மின் தடை உள்ளிட்ட காரணங்களால் ஒரு வாரமாக பிரதான குழாயில் குடிநீர் வரவில்லை. தற்போது சரியாகிவிட்டது. இன்று (நேற்று) குடிநீர் வினியோகம் துவங்கிவிட்டது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us