sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை

/

 வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை

 வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை

 வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு... துண்டிப்பு! ரூ.973 கோடி வராததால் மாநகராட்சி எச்சரிக்கை

1


ADDED : பிப் 13, 2026 05:10 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஏழாயிரம் ரூபாய்க்கு மேல் வரி பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி உள்ளிட்ட ஏழு வகை வரிகள் வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோர் 5.88 லட்சம் பேர் உள்ளனர்.

நடப்பு நிதியாண்டில் வர வேண்டிய ரூ.1,541 கோடி வரியில்,நேற்று வரை ரூ.568 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது; ரூ.973 கோடி வரவேண்டியுள்ளது.

சொத்து வரி ரூ.664 கோடி வரவேண்டும். நேற்று வரை 393 கோடி வசூலாகி உள்ளது. ரூ.377 கோடி காலியிட வரியில்,ரூ.30 கோடிக்கும் கீழ் தான் வந்துள்ளது.

குடிநீர் வரி ரூ.99 கோடி வரவேண்டும்; ரூ.53 கோடி செலுத்தி உள்ளனர். இன்னும் ரூ.46 கோடி வர வேண்டும். இந்த நிலுவை தொகையை மார்ச் முடிவதற்குள் வசூலிக்கும் பணியில் பில் கலெக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய் பிரிவு அதிகாரிகள் முழு வீச்சில் வரி வசூலில் குதித்துள்ளனர். 'தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் வரியை முழுமையாக வசூலிக்க பில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலர் ஐந்தாண்டுகள் வரை வரி செலுத்தாமல் உள்ளனர். வரி வசூலை வைத்துதான் வளர்ச்சி பணிகள் செய்ய முடியும். ரூ.7,000க்கு மேல்வரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என்றனர்.

மத்திய மண்டலம் 'டாப்'

மத்திய மண்டலத்தில் ரூ.239 கோடி சொத்து வரி வரவேண்டும்; 123 கோடி வந்துள்ளது. கிழக்கில் ரூ.144 கோடிக்கு ரூ.96 கோடி வசூலாகி உள்ளது. மேற்கில் ரூ.93 கோடிக்கு ரூ.57 கோடியும், வடக்கில் ரூ.113 கோடிக்கு ரூ.76 கோடியும், தெற்கில் ரூ.75 கோடிக்கு ரூ.39 கோடியும் வசூலாகியுள்ளது. அதிகபட்சமாக மத்திய மண்டலத்தில் ரூ.116 கோடி வரவேண்டியுள்ளது.








      Dinamalar
      Follow us