/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்று நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்
/
மூன்று நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்
ADDED : ஏப் 23, 2025 11:04 PM
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தின், 350 எம்.எம்., பிரதான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில்வே கேட் அருகே உள்ள, ரயில்வே அலுவலக வளாகத்தில், அதிக அளவில் குடிநீர் வீணாகி வருகிறது. நெல்லித்துறை சாலையிலும் குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைகிறது. குடிநீர் குழாய் பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், 29ம் தேதி முதல் மே மாதம் 1ம் தேதி முடிய (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய மூன்று நாட்களுக்கு நகரில் குடிநீர் விநியோகம் இருக்காது. குழாய் பழுது பணி நடைபெறும் பொழுது ஒன்றிலிருந்து ஆறு வரை உள்ள வார்டுகளுக்கும், 10 லிருந்து 14 வரையிலும், 20 லிருந்து 33 வரையிலும் உள்ள, 25 வார்டுகளுக்கு நகரில் குடிநீர் வினியோகம் தடைபடும். எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கமிஷனர் அமுதா தெரிவித்தார்.

