ADDED : அக் 23, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் : கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மலையும், அதன் அடிவார கிராமங்களில் கனமழையும் பெய்தது.
சிறுவாணி அடிவாரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை, இடைவிடாத இடியுடன் கூடிய தொடர் கனமழை பெய்தது.
நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை வரை, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில், 4 மி.மீ., மழையும், சிறுவாணி அடிவாரப்பகுதியில், 5 மி.மீ., மழையும், தொண்டாமுத்தூரில், 31 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மலையும், அதன் அடிவார பகுதியான தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், கனமழையும் பெய்துள்ளதால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்காமல் உள்ளது. இதனால், வாய்க்கால் மூலம் குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

