/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை பேரூராட்சியில் குடிநீர் திட்ட வெள்ளோட்டம்
/
சிறுமுகை பேரூராட்சியில் குடிநீர் திட்ட வெள்ளோட்டம்
சிறுமுகை பேரூராட்சியில் குடிநீர் திட்ட வெள்ளோட்டம்
சிறுமுகை பேரூராட்சியில் குடிநீர் திட்ட வெள்ளோட்டம்
ADDED : ஜூலை 22, 2025 10:21 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை பேரூராட்சியில், 19.97 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ள குடிநீர் மேம்பாட்டு திட்டத்தில், தற்போது வெள்ளோட்டம் நடைபெறுகிறது.
சிறுமுகை பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. வச்சினம்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து தினமும், 31 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து, அதை சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள், குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சியில், 4500 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ், 19.97 கோடி ரூபாய் செலவில், குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்தில் புதிதாக, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலைத் தொட்டியும், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகள், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, ஒரு மேல்நிலைத் தொட்டியும் என, மொத்தம் நான்கு மேல்நிலைத் தொட்டிகள், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நகரில் அனைத்து பகுதிகளிலும் புதிதாக மெயின் மற்றும் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது நான்கு மேல்நிலைத் தொட்டிகளிலும் தண்ணீரை நிரப்பி, வெள்ளோட்டம் நடைபெறுகிறது. குழாயில் தண்ணீர் கசிவு இருந்த இடங்களில், அதை சரி செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் வெள்ளோட்டம் முடிந்து, ஒரே சீராக அனைத்து மக்களுக்கும் குடிநீர் செல்லும் வகையில் இருக்கும் பட்சத்தில், பேரூராட்சி நிர்வாகம் இத்திட்டத்தை தன்வசம் ஏற்றுக்கொள்ளும் என சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவல ர் மாலா, தலைவர் மாலதி ஆகியோர் தெரிவித்தனர்.