/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா
/
இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா
ADDED : ஜூலை 22, 2025 10:21 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், இலவச சுய தொழில் பயிற்சி துவக்க விழா நடந்தது.
இம்மையம் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சுயதொழில் பயிற்சிகளை கிராமப்புற மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதில், தையல், ஆரி எம்ப்ராய்டரி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. துவக்க விழா நிகழ்ச்சியில், ரோட்டரி கேலக்ஸி தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். பயிற்றுனர் சரசு மற்றும் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தனர். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் கணேஷ் குமார், தலைமை வகித்து பேசுகையில், ''நாட்டு வளர்ச்சிக்கு பெண் தொழில் முனைவோரின் பங்கு அவசியம்'' என்றார். இவரை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் ஜெய்கணேஷ், ஸ்ரீதர், சுரேஷ், முகில் வண்ணன் உள்ளிட்டோர் பேசினர். தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.