/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் குடிநீர் திட்ட பணிகள் ரொம்ப 'ஸ்லோ'; ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
/
மாநகரில் குடிநீர் திட்ட பணிகள் ரொம்ப 'ஸ்லோ'; ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
மாநகரில் குடிநீர் திட்ட பணிகள் ரொம்ப 'ஸ்லோ'; ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
மாநகரில் குடிநீர் திட்ட பணிகள் ரொம்ப 'ஸ்லோ'; ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
ADDED : மே 19, 2025 11:56 PM

கோவை ; ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளில் ஏற்படும் தொய்வு காரணமாக ரோடு போட முடியாத நிலை உள்ளதாக, ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொந்தளித்தனர்.
மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில், கோவை எம்.பி., ராஜ்குமார் தலைமையிலும், மேயர் ரங்கநாயகி முன்னிலையிலும் வார்டுகளில் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அம்ரூத், சூயஸ், யு.ஜி.டி., பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கவுன்சிலர்கள் கொந்தளிக்க, பதில் சொல்ல முடியாமல், தனியார் நிறுவன ஊழியர்கள் திணறினர்.
நிதி இருந்தும் முடியல!
ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வார்டுக்கு நான்கு பேர் மட்டுமே இருப்பதால், 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. ஒரு வார்டுக்கு, 20 பேர் இருந்தால் மட்டுமே, இருவர் அடங்கிய குழுக்களாக பிரிந்து பணிகளை விரைந்து முடிக்க முடியும்.
அம்ரூத், பாதாள சாக்கடை திட்ட பணிகளை(யு.ஜி.டி.,) வேகப்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிதாக ரோடுகளை போட முடியும். அதேசமயம் தரமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில், குடிநீர் கசிவு ஏற்படுகிறது.
இதற்காக ரோடுகளை மீண்டும் தோண்டும்போது புதிய ரோட்டின் அடையாளமே மறைந்துவிடுகிறது. ஒவ்வொரு வார்டிலும், ரூ.1.5 கோடி வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிதி இருந்தும் குடிநீர் தொடர்பான பணிகளால் ரோடு போடமுடியாத சூழல் உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
அதேபோல், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளில் சில வார்டுகளில் ஒரு தொட்டிக்கு ஒரு வால்வு மட்டுமே உள்ளது. 2,500 வீடுகள் இருக்கும் ஒரு வார்டில் ஒரு வால்வு மட்டுமே உள்ளது.
அங்கு மேடான பகுதிகளுக்கு அழுத்தம் இல்லாததால், தண்ணீர் செல்வதில்லை.
அதேசமயம் தாழ்வான பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதுபோன்ற இடங்களில் வால்வுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும், இதேநிலைதான் காணப்படுகிறது. எனவே, குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து ரோடு போட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நிறைவில், எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு, தனியார் நிறுவன பணியாளர்களை அறிவுறுத்தினர். மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து பணிகளை கண்காணித்து, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.