/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரம்பிக்குளத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
/
பரம்பிக்குளத்துக்கு நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : செப் 16, 2025 09:46 PM

வால்பாறை; பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையிலும், சோலையாறு அணை நீர் நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது.
வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால், பி.ஏ.பி., திட்டத்துக்கு உட்பட்ட சோலையாறு, அணை கடந்த ஜூன் மாதம், 26ம் தேதி முதன் முறையாக நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின. இதனால்,பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை இந்த ஆண்டில் மட்டும் ஏழு முறை நிரம்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழைப்பொழிவு குறைந்து லேசான சாரல்மழை மட்டுமே பெய்கிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 160.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 476 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், 523 கனஅடி தண்ணீர் வீதம் கேரள சோலையாறுக்கு திறந்து விடப்படுகிறது.
பரம்பிக்குளம் அணைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் குறையாமல், நிரம்பிய நிலையில் காட்சியளிக்கிறது.