/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளகோவிலுக்கு ஒப்பந்தப்படியே தண்ணீர் வினியோகம்; போராட்டம் நடத்துவது தேவையில்லாதது
/
வெள்ளகோவிலுக்கு ஒப்பந்தப்படியே தண்ணீர் வினியோகம்; போராட்டம் நடத்துவது தேவையில்லாதது
வெள்ளகோவிலுக்கு ஒப்பந்தப்படியே தண்ணீர் வினியோகம்; போராட்டம் நடத்துவது தேவையில்லாதது
வெள்ளகோவிலுக்கு ஒப்பந்தப்படியே தண்ணீர் வினியோகம்; போராட்டம் நடத்துவது தேவையில்லாதது
ADDED : ஜூன் 24, 2025 12:50 AM
பொள்ளாச்சி; 'வெள்ளகோவிலுக்கு ஒப்பந்தப்படி தான் நீர் வழங்கப்படுகிறது. போராட்டம் தேவையில்லாதது' என, பொள்ளாச்சியில் நடந்த அமைதி பேச்சு கூட்டத்தில் திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
பி.ஏ.பி., திட்டத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. இதில், வெள்ளக்கோவில் கிளை கால்வாய்க்கு கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டுமென, இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வெள்ளகோவில் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்குஎதிர்ப்பு தெரிவித்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு சார்பில், ஏ.எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது.
நேற்று, பி.ஏ.பி., திருமூர்த்தி நீர் தேக்க திட்டக்குழு மற்றும் பகிர்மான குழு தலைவர்களுடான அமைதி பேச்சு கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன், ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
கிளை கால்வாயில் ஒரு மண்டலத்துக்கு, 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது, 100 கனஅடிக்கு பதிலாக, 131 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு கால்வாயில், 4.50 அடி உயரத்துக்கு நீர் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக பாசனம் பெறும் மேல் பகுதியில் உள்ள கால்வாய்களை அடைத்து, அடைத்து கொடுக்க வேண்டிய துள்ளது. அங்குள்ள, 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதும் இல்லை. அதிகபட்சமாக, ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே பாசனம் பெறுகின்றன. கடந்த, 2021ம் ஆண்டு இதுபோன்று காங்கயத்தில், போராட்டம் நடத்திய போது ஒப்பந்தம் போடப்பட்டது. மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவித்து கூடுதல் தண்ணீர் கேட்டுபோராட்டம் நடத்துவது நியாயமானதல்ல. அனைத்து பகுதிக்கும் சமமான நீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.