/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பெய்யும் காலத்தில் ரோட்டில் தேங்கும் தண்ணீர்
/
மழை பெய்யும் காலத்தில் ரோட்டில் தேங்கும் தண்ணீர்
ADDED : ஆக 21, 2025 08:21 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் இருந்து கோவிந்தாபுரம் செல்லும் ரோட்டில், மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் இருந்து கோவிந்தாபுரம் செல்லும் ரோட்டில் மக்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த ரோட்டில் நீர் தேக்கப்பகுதி அருகே, தரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகளவு மழை பெய்யும் நேரத்தில் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி வெளியேறாமல் ரோட்டில் குளம் போல் நிற்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர்.
இப்பகுதியில் மின்விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழ அதிக வாய்ப்புள்ளது.
மழை பெய்யாத போது, இப்பகுதியில் சேறும் சகதியுமாக இருப்பதால், இவ்வழியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்களும் பாதிக்கின்றனர். எனவே, இந்த ரோட்டில் தரை பாலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க, உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

