ADDED : மார் 20, 2026 09:45 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் ஒன்றியத்தில் முதல் முறையாக நாம் தமிழர் கட்சியின் அவிநாசி தொகுதி வேட்பாளர் நாளை மறுநாள் (22ம் தேதி) பிரசாரத்தை துவக்குகிறார்.
அவிநாசி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பு படித்துள்ள மேனகா, 29 அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் அவிநாசி தொகுதியைச் சேர்ந்த அன்னூர் ஒன்றியத்தில், நாளை முதல் முறையாக பிரசாரத்தை துவக்குகிறார். நாளை மறுநாள் மாலை 5:00 மணிக்கு, அன்னூர் ஓதிமலை பாதையில் கொள்கை விளக்க பிரசாரம் நடைபெறுகிறது.
இதில் வேட்பாளர் அறிமுகப்படுத்தப்படுகிறார். கட்சியின் மண்டல செயலாளர் டாக்டர் சதீஷ்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி, வக்கீல் பாசறை செயலாளர் பகவத் குமார், தமிழாசிரியர் குமார் உள்ளிட்டோர் கட்சியின் கொள்கைகள், தேர்தல் அறிக்கை குறித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.
