/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கடவுள் இருக்கிறாரா என்று விவாதிக்கலாம்; முன்னோர் இல்லை என்று சொல்ல முடியாது'

ADDED : ஜூலை 18, 2025 09:54 PM

கோவை; ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு, கம்பராமாயண தொடர் சொற்பொழிவை, திருச்சி கல்யாணராமன் நிகழ்த்தி வருகிறார். நேற்று மாலை அவர் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:
நம்முடைய முன்னோர்களுக்கு, சரியாக கர்மா செய்ய வேண்டும். வள்ளுவரும் இதை, 'தென்புலத்தார் தெய்வ வழிபாடு அவசியம்' என்று சொல்கிறார். தென்புலத்தார் என்றால் முன்னோர்கள் என்று பொருள்.
கடவுள் இருக்கிறாரா என்று விவாதம் செய்யலாம். ஆனால் நம் முன்னோர்களை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நாம் நம் முன்னோர்களை பார்க்கவில்லை என்றாலும், அந்த சந்ததி வழியாக நாம் இருக்கிறோம்.
நாம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய, ஆண்டு சிரார்தத்தையும் திதி காரியங்களையும் புனித நதிகளில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், நம் பரம்பரை நன்றாக இருக்கும்.
பெரியோர்கள், முதியோர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் இல்லாத நாட்களில் அவர்களை நினைத்து வழிபாடு செய்வதை, பழக்கமாக கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இன்று, 'சீதா கல்யாண வைபவம்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. அனைவரும் பங்கேற்று பகவானின் அருளை பெறலாம்.