/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரிசு நிலத்தை விளை நிலமாக்கலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
/
தரிசு நிலத்தை விளை நிலமாக்கலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
தரிசு நிலத்தை விளை நிலமாக்கலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
தரிசு நிலத்தை விளை நிலமாக்கலாம்! விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 27, 2025 10:38 PM
அன்னுார்; தரிசு நிலங்களை விளைநிலமாக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளைநிலம் ஆக்க, மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அன்னூர் வட்டாரத்தில், 21 கிராம ஊராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
எட்டு விவசாயிகள் அடங்கிய குழு, 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக நீண்ட கால தரிசு நிலங்களை தேர்வு செய்து, முட்புதர்களை அகற்றி, சமன் செய்து, அங்கு பலன் தரும் பழ மரக்கன்றுகளை நடுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.
அன்னூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆழ்குழாய் கிணறு அமைப்பதுடன், மின் இணைப்புக்கான செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படும். இது தவிர, தனிநபர்களின் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி, உழவு செய்து, சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு, ஒரு எக்டேருக்கு, 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்; அல்லது உழவர் செயலியில் பதிவு செய்யலாம்' என, தெரிவித் துள்ளார்.