/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'
/
'அரசுக்கு தெரிவித்திருக்கோம்!'
ADDED : ஏப் 02, 2025 07:46 PM
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. நிரந்தர பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுக்க முடிவதில்லை.
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளிலும், அவ்வப்போது கட்டிதரப்படுகிறது. சிதிலமடைந்தவற்றையும் மராமத்து பணிகளின் வாயிலாக சீரமைத்து வருகின்றனர். தற்போது, துாய்மைப்பணியாளர்கள், இரவு காவலர்கள் பற்றாக்குறை தான் பள்ளிகளில் தொடர் பிரச்னையாக உள்ளது.
இதனால், பல பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது உண்மை தான். இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் வாயிலாக, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் போதுமான அளவில் உள்ளன. சில பள்ளிகளில் இடப்பற்றாக்குறையால் வகுப்பறை கட்ட முடியாத நிலை உள்ளது,' என்றார்.

