/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பக்தியையும் தர்மத்தையும் சம்பாதிக்க வேண்டும்' ; சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் தகவல்
/
'பக்தியையும் தர்மத்தையும் சம்பாதிக்க வேண்டும்' ; சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் தகவல்
'பக்தியையும் தர்மத்தையும் சம்பாதிக்க வேண்டும்' ; சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் தகவல்
'பக்தியையும் தர்மத்தையும் சம்பாதிக்க வேண்டும்' ; சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் தகவல்
ADDED : ஜூலை 17, 2025 10:32 PM

கோவை; ''இளைஞர்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் அதற்கான எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அதோடு பக்தியையும் தர்மத்தையும் சேர்த்து சம்பாதித்தால் தான் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும்,''என்று திருச்சி கல்யாணராமன் கூறினார்.
ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் ஆடிஉற்சவத்தை ஒட்டி கம்பராமாயண தொடர் சொற்பொழிவை கலைமாமணி திருச்சி கல்யாணராமன் நிகழ்த்தி வருகிறார் நேற்று மாலை அவர் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:
மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற தர்மத்தை ராமாயணம் சுட்டிக்காட்டுகிறது. ராமாயணம் ஏன் கேட்கவேண்டும் என்றால் புண்ணியம் வரும் என்பது மட்டுமல்ல.
இந்த உலகில் பெரியவர்கள் பிள்ளைகள் என்று அனைவரிடத்திலும் சமுதாயத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை சொல்வது தான் ராமாயணம்
ராமநாமத்தை சொன்னால் நமக்கு மோட்சம் கிடைக்கும், மனிதனிடம் உள்ள காமக்குரோதம் என்ற ஆறு குணங்களை அடக்கி வாழ்ந்து காட்டியவர் தான் ராமர்.
பெரும்பாலான மனிதர்களிடம் விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மை இருப்பதில்லை அதை வரவழைப்பது தான் ராமாயணம். இது போன்ற நல்ல விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்றால் ராமா, ராமா, என்று ராமநாமத்தை ஜெபிக்க வேண்டும். நம் பாரத தேசத்தின் இதிகாசங்களை அன்றாடம் கேட்க வேண்டும்.
இப்படி கேட்காததாலோ என்னவோ சமுதாயத்தில் ஆணவக்கொலை, தற்கொலை, பெண்களை துன்புறுத்துதல் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பது தான் நம் கொள்கை. இதைத்தான் வால்மீகியும், கம்பரும் வழியுறுத்தி தர்மத்தை ராமாயணத்தின் வாயிலாக புகட்டியுள்ளனர்.
நம் பாரத தேசத்தின் கலாச்சாரமே இது தான் இதை உலகமே விரும்புகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கு தான் ராமாயணம் கேட்க வேண்டும். கேட்டதை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இளைஞர்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் அதற்கான எண்ணம் மேலோங்கியிருக்கிறது. அந்த பக்தியோடு தர்மத்தையும் சேர்த்து சம்பாதித்தால் தான் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும். இவ்வாறு கல்யாணராமன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
திரளான பக்தர்கள் சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்டனர். இன்றுமாலை 6:30 மணிக்கு ஸ்ரீ ஐய்யப்ப பூஜா சங்கத்தில் கம்பராமாயண சொற்பொழிவு நடக்கிறது.