'பூமியில் இருந்து எடுப்பதை திரும்ப கொடுக்க வேண்டும்'
'பூமியில் இருந்து எடுப்பதை திரும்ப கொடுக்க வேண்டும்'
ADDED : ஜன 27, 2026 05:09 AM

கோவை: சிறுதுளி, காவல் துறை மற்றும் கோவை சிட்டிசன்ஸ் சார்பில் ஒய்ல்டு டி.என். வனம் திட்டத்தின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அவிநாசி ரோடு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காடு வளர்ப்பு திட்டத்தில் மியாவாக்கி அடர்வனம் ஏற்படுத்த, 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், ''பூமியின் வளங்களை தொடர்ந்து எடுத்து வருகிறோம். குறிப்பாக நீரை அதிகளவு எடுத்து வருகிறோம். பூமியில் இருந்து எடுப்பதை திரும்பக் கொடுத்தால் தான் நமக்கு அது தொடர்ந்து கிடைக்கும். அனைவரும் அதற்கு முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் குணசேகரன் பேசுகையில், ''விலங்குகள் அதிகரித்தால் காடு பெருகும். மரம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் வளமாகும்,'' என்றார்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன், இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த், சீமா தலைவர் மிதுன் ராம்தாஸ், இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
