/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அடுத்தவருக்காக வாழ வேண்டும்'
/
'அடுத்தவருக்காக வாழ வேண்டும்'
ADDED : ஜன 12, 2026 06:02 AM

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கிக்கானி மேல்நிலைப் பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கில், எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அருளாளர் நாமதேவர் எனும் தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் சிவ ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பேசியதாவது:
இன்று நாம் பல விஷயங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறோம். இவை நம்மோடு இருக்குமா என்பது கிடையாது. சிறிய விஷயங்களுக்கு சண்டையிடுகிறோம். நாமதேவர் தனக்கு எதுவும் சொந்தமில்லை என கூறுகிறார்.
நமது கடமையை உண்மையாக செய்தால் பகவான் வீட்டு வாசலில் வந்து நிற்பார். நமக்காக வாழ்வதை விட்டு, அடுத்தவருக்காக வாழ வேண்டும்.
ஞானம் என்பது அனைத்தையும் விட்டு விடுவதாகும். நாம் பகவானை தேடுகிறோம். ஆனால் நாமதேவர் பகவான் என உச்சரித்தாலே காட்சி தருவார்.
எதிர்பார்ப்பின்றி எதை செய்தாலும் நல்லதே. கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். பகவான் எல்லா இடங்களிலும் நிலைத்திருப்பவர். உண்மையாக இருப்பவரின் பக்திக்கு அடிமையானவர், பகவான். யாரிடமும் பிரிவினை பார்க்க கூடாது. அனைவருக்கும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

