/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செம்மொழி பூங்கா வளாகத்தில் இலக்கிய அரங்கம் வேண்டும்'
/
'செம்மொழி பூங்கா வளாகத்தில் இலக்கிய அரங்கம் வேண்டும்'
'செம்மொழி பூங்கா வளாகத்தில் இலக்கிய அரங்கம் வேண்டும்'
'செம்மொழி பூங்கா வளாகத்தில் இலக்கிய அரங்கம் வேண்டும்'
ADDED : ஜன 05, 2026 05:10 AM
கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில், இலக்கிய அரங்கம் அமைத்து கொடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மணி கூறியதாவது:
தமிழகத்தில் அதிக எழுத்தாளர்கள், கவிஞர்கள் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது. இங்கு, 20க்கும் மேற்பட்ட இலக்கிய அமைப்புகள் செயல்படுகின்றன. மாதம் தோறும் இலக்கிய கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
புதிய நுால்கள் மற்றும் நுால் அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்த குறைந்த வாடகையில் கூட்ட அரங்குகள் கிடைப்பதில்லை. இளம் படைப்பாளர்கள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அதனால், கோவையில் தமிழ் மொழியின் பெயரில், 45 ஏக்கர் பரப்பளவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் இலக்கிய கூட்டம் மற்றும் நுால் வெளியிட்டு நிகழ்ச்சிகள் நடத்த, தனியாக கூட்ட அரங்கு, இலவசமாக அல்லது குறைந்த வாடகைக்கு, மாவட்ட நிர்வாகம் கட்டி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

