ADDED : பிப் 26, 2024 11:54 PM

அ நிறம் | அளவு
போத்தனூர்;ஈச்சனாரி கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியின், 12 மற்றும், 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை., வளாக அரங்கில் நடந்த விழாவிற்கு, கல்வி குழும தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.
சென்னை டி.சி.எஸ்., சரக தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு பேசுகையில், சமுதாயம் முன்னேற புதிய சிந்தனைகள், தொழில்நுட்டம், தலைமை பண்பு மிக முக்கியம். வாழ்நாள் முழுவதும் கற்றலை தொடர வேண்டும். செயலிலும், பேச்சிலும் நேர்மறை எண்ணங்கள் வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து அவர் மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழை வழங்கினார். முன்னதாக, கல்லூரி முதல்வர் மணிமாறன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கற்பகம் கல்வி குழும அறங்காவலர்கள் தமயந்தி, கார்த்திக், முதன்மை செயல் அலுவலர் முருகையா, தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
