/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகளிடம் வாசிப்பு திறனை வளர்க்க வேண்டும்'
/
'குழந்தைகளிடம் வாசிப்பு திறனை வளர்க்க வேண்டும்'
ADDED : ஜன 20, 2025 11:34 PM

கோவை; கோவை, வெள்ளலுார் முத்தமிழ்ச் சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, முத்தமிழ் சங்க வாகை துரைசாமி தலைமை வகித்தார். இலக்கியம் பொதுசேவை மற்றும் வாழ்நாளில் சாதனை செய்தவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.
பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா எழுதிய, 'கற்கை நன்றே' நுால் வெளியிடப்பட்டது. நுாலை முத்தமிழ் சங்க நிறுவனர் மாரியப்பன் வெளியிட, சாந்தமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
பயனீர் கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் அன்புசிவா பேசுகையில், ''குழந்தைகளிடம் புத்தகம் வாசிப்பு திறனை உருவாக்க வேண்டும். வாசிப்புதான் மாணவர்களை ஊக்கப்படுத்தும். அவர்களிடம் எழுதும் ஆர்வம் வளரும். இந்திய வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், முக்கியமான ஆளுமைகளின் புத்தகங்களை வாசிக்க, கற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
கவிஞர்கள் தமிழ் நிலா, சண்முகதேவி, கனகமணி, பேராசிரியர் ஸ்ரீலட்சுமி துர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் நாடகம் நடந்தன.

