/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய ரோட்டை தோண்டி விட்டு புதிதாக தார்சாலை அமைக்கணும்!
/
பழைய ரோட்டை தோண்டி விட்டு புதிதாக தார்சாலை அமைக்கணும்!
பழைய ரோட்டை தோண்டி விட்டு புதிதாக தார்சாலை அமைக்கணும்!
பழைய ரோட்டை தோண்டி விட்டு புதிதாக தார்சாலை அமைக்கணும்!
ADDED : மே 08, 2025 12:46 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரல்பட்டியில் இருந்து தளவாய்பாளையம் வரை, தார்சாலை புதுப்பிக்கப்படுகிறது.
ரோட்டை பெயரளவுக்கு புதுப்பிக்காமல், மில்லிங் செய்து, புதிய சாலை அமைக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மக்கள் கூறியதாவது:
வீரல்பட்டி, புளியம்பட்டி கிராம மக்கள், சமத்தூர், பொள்ளாச்சி செல்லவும்; கரட்டுப்பாளையம், தளவாய்பாளையம், பழையூர் பகுதி மக்கள் வீரல்பட்டி, மாமரத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லவும், வீரல்பட்டி - தளவாய்பாளையம் சாலை முக்கியமானது.
இந்த வழியாக பொதுப்பாதை இல்லாத நிலையில், கிராம மக்களின் நலன் கருதி, தங்களது விவசாய பூமி வழியாக தார்ச்சாலை அமைக்க விவசாயிகள் நிலம் வழங்கியதால், இந்த ரோடு அமைக்கப்பட்டது.
இந்த ரோட்டை புதுப்பிக்கிறோம் என்ற பெயரில், 'டாப்பிங்' மட்டும் போடப்பட்டதால், மிக மோசமாக பழுதடைந்தது. தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இப்போதும் 'டாப்பிங்' மட்டும் போட்டால், ஓரிரு மாதங்களிலேயே பெயர்ந்து பழுதடைந்துவிடும்.
ஏனெனில், இப்பகுதியில் இயங்கும் குவாரிகளில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றன. கனரக வாகனங்களால், தார்ச்சாலை விரைவிலேயே குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.
எனவே, ஏற்கனவே போடப்பட்ட தார்ச்சாலையை முற்றிலும் சுரண்டி எடுத்துவிட்டு, அதாவது 'மில்லிங்' செய்த பின்பே, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். குறிப்பாக, வளைவுகளில் கனரக வாகனங்களால் பெரிய பள்ளம் ஏற்படும். இதைத் தவிர்க்க, வளைவுகளில் தரமாக தார்சாலை அமைக்க வேண்டும்.
அவ்வாறு, புதுப்பிப்பதை பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

