/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கணும்!
/
ரோட்டோர தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கணும்!
ADDED : ஜன 22, 2025 08:12 PM

கிணத்துக்கடவு; நல்லட்டிபாளையம் - - பட்டணம் செல்லும் ரோட்டில் தரைப்பாலம் அருகே தடுப்புகள் அமைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு அடுத்துள்ள, நல்லட்டிபாளையத்திலிருந்து பட்டணம் செல்லும் ரோடு, ஒரு மாதத்துக்கு முன் சீரமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
ரோட்டின் ஓரத்தில் நீரோடை உள்ளது. ஓடை குறுக்கிடும் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் சிலர், இந்த தரைப்பாலம் அருகே செல்லும்போது தடுமாறி செல்கின்றனர். இப்பகுதியில் மின்விளக்கு இல்லாததால் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இங்கு தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கூறியதாவது: பட்டணம் - நல்லட்டிபாளையம் ரோடு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, தரைப்பாலம் அருகே தடுப்புகள் வைக்கவும், ரோட்டோரம் கம்பிகளை அமைக்கும் படியும் கேட்டுக்கொண்டோம்.
ஆனால், ரோடு அமைப்பதற்கு மட்டுமே நிதி உள்ளது, என, ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, விரைவில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

