/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போலி வாக்காளர்களை கண்டு பிடிக்கணும்'
/
'போலி வாக்காளர்களை கண்டு பிடிக்கணும்'
ADDED : நவ 09, 2025 10:44 PM
மேட்டுப்பாளையம்: காரமடையில் பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினரும், தொகுதி அமைப்பாளருமான சதீஷ்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ், வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், வெவ்வேறு இடங்களில் ஓட்டுகள் வைத்திருப்பவர்களின் பெயரை நீக்க வேண்டும்.
18 வயது நிரம்பிய இந்திய குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் படிவங்களை பூர்த்தி செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டது.----

