/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரிந்துரைக்கப்படாத இடுபொருட்கள் தென்னை மரங்களுக்கு வேண்டாமே!
/
பரிந்துரைக்கப்படாத இடுபொருட்கள் தென்னை மரங்களுக்கு வேண்டாமே!
பரிந்துரைக்கப்படாத இடுபொருட்கள் தென்னை மரங்களுக்கு வேண்டாமே!
பரிந்துரைக்கப்படாத இடுபொருட்கள் தென்னை மரங்களுக்கு வேண்டாமே!
ADDED : நவ 09, 2025 10:44 PM
பெ.நா.பாளையம்: 'தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்படாத இடுபொருட்களை பயன்படுத்த வேண்டாம்' என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
பூச்சி மருந்துகள் சட்டம், 1968 மற்றும் பூச்சி மருந்துகள் விதி, 1971 வேளாண்மை பயிர்களில் சரியான பூச்சி மருந்து மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.
இத்தகைய சட்டங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லிகளை தனித்தனியாக வாங்கி, ஒன்றுடன் ஒன்று கலந்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.
எனவே, மத்திய அரசின் மத்திய பூச்சி மருந்து வாரியம் மற்றும் பதிவு செய்தல் குழுவில் பதிவு செய்யப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட இணக்கமான பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சான கொல்லிகளை மட்டுமே பரிந்துரை செய்யப்பட்ட சரியான பயிர்களில், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கு பயன்படுத்த வேண்டும்.
தென்னையை தாக்கும் 'ரூகோஸ்' சுருள் வெள்ளை ஈக்களுக்கு மேலாண்மை செய்வதற்கு மஞ்சள் நிற பாலிதீன் கவர்களில் தாவர எண்ணெயை தடவி, இரண்டு மரங்களுக்கு இடையே ஆறு அடி உயரத்தில் ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில் தொங்க வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.
பூச்சிகளின் பரவலை குறைக்க, மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புரத்தில் தண்ணீரை பாய்ச்சி தெளிக்க வேண்டும். பச்சை கண்ணாடி பூச்சி இரை விழுங்கிகளை, எக்டேருக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.
உரிய அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து, தென்னை ஓலையின் அடிப்பகுதியில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகளை அழித்து விடுவதால், பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மரங்களை சுற்றி பசுந்தழை உர பயிர்களான சணப்பை அல்லது தக்கை பூண்டு விதைத்து, 45ம் நாளில் மடக்கி உழுவதன் வாயிலாக, மண்வளம் மற்றும் மண்ணின் வாயிலாக பரவும் நோய்களை வெகுவாக குறைக்கலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை, தென்னை விவசாயிகளுக்கு அறிவுறுத்திஉள்ளது.

